என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பூண்டி மாதா"
- கல்லறைகளை தூய்மைப்படுத்தி மலர் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி, வழிபடுவார்கள்.
- கல்லறைகளில் வைப்பதற்கு என சிலுவைகளை வாங்கி சென்றனர்.
பூதலூர்:
உலகமெங்கிலும் கிறிஸ்தவர்கள் இறந்து போன தங்கள் குடும்ப உறுப்பினர்களை நினைவு கூறும் நிகழ்வாக அனுசரிக்கப்படுவது கல்லறை திருநாள். இந்த நாளில் இறந்து போன தங்கள் குடும்ப உறுப்பினர்களின் கல்லறைகளை தூய்மைப்படுத்தி மலர் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி, வழிபடுவார்கள். கல்லறை திருநாளை முன்னிட்டு இன்று காலை பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
இதில்பேராலய அதிபர் சாம்சன் தலைமையில் ,துணை அதிபர் ரூபன் அந்தோனிராஜ் ,தியான மையஇயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவிபங்குதந்தையர்கள்அமலவில்லியம், அன்பு ராஜ், ஆன்மிக தந்தை அருளானந்தம்ஆகியோர் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினார்கள். திருப்பலி முடிவடைந்ததும் பூண்டி மாதா பேராலயத்தில் அருட்தந்தையாக பணியாற்றி மறைந்து பூண்டி மாதா பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்ட அருட்தந்தை லூர்து சேவியர் அடிகளாரின் கல்லறை புனிதம் செய்து வழிபட்டனர்.இதனை முன்னிட்டு லூர்து சேவியர் கல்லறை மலர் அலங்காரம் செய்யப்பட்டு மெழுகு வர்த்தி ஏற்றி வைக்கப்பட்டு இருந்தது.பக்தர்கள் லூர்து சேவியர் கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர்.பூண்டி மாதா பேராலய கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்ட அருட்தந்தை ராயப்பர் அடிகளார் கல்லறையும் மந்திரிக்கப்பட்டது. இன்று மாலைபூண்டி மாதா பேராலய பங்கு கிராமங்களில் அமைந்துள்ள கல்லறைகள் பூண்டி மாதா பேராலய அருட் தந்தையர்கள் நேரில் சென்று புனிதம் செய்து வழிபாடு நடத்துவார்கள். கல்லறை திருநாளைமுன்னிட்டு இந்த பகுதியில் உள்ள கிறித்துவ கல்லறைகள் தூய்மை செய்யப்பட்டு மலர் மாலை அணிவித்து சாம்பிராணி போட்டு உருக்கமாக வழிபட்டனர். திருக்காட்டுபள்ளியில் கல்லறைகளில் புதிய மரச்சிலுவை வைப்பதற்கு என சிறியதும் பெரியதும் ஆன சிலுவைகள் விற்பனை செய்ய வைத்து இருந்தனர். கல்லறைகளில் வைப்பதற்கு என சிலுவைகளை வாங்கி சென்றனர்.
- கும்பகோணம் பிஷப் புனிதம் செய்து தேர்பவனியை தொடங்கி வைக்கிறார்.
- தேர்பவனி தொடங்கியதும் சிறப்பு வாணவேடிக்கை நடக்கிறது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டியில் பிரசித்தி பெற்ற பூலோகம் போற்றும் பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அந்தமான் போர்ட் பிளேயர் மறை மாவட்ட பிஷப் விசுவாசம் செல்வராஜ் கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றி பூலோகம் போற்றும் பூண்டி மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழாவை தொடங்கி வைத்தார். விழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பரபவனியும் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது.
இன்று(சனிக்கிழமை) மாலை மரியா -மன்னிப்பின் சிகரம் என்ற பொருளில் செங்கல்பட்டு மறை மாவட்ட முதன்மை குரு ஜான் போஸ்கோ திருப்பலி நிறைவேற்றுகிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை பூண்டி மாதா பேராலயத்தில் பங்குத் தந்தையர்களாக பணியாற்றி மறைந்த லூர்து சேவியர் மற்றும் ராயப்பர் அடிகளார் ஆகியோரை நினைவு கூர்ந்து திருப்பலி நிறைவேற்றப்படும்.
மாலை 6 மணிக்கு கும்பகோணம் பிஷப் அந்தோணிசாமி தலைமையில் மரியா- அருளின் ஊற்று என்ற தலைப்பில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இதில் பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தை அருளானந்தம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். திருப்பலி முடிந்தவுடன் இரவு 8 மணிக்கு வண்ண மின்விளக்குளாலும், மல்லிகை மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் பூண்டி அன்னையின் சுரூபம் வைக்கப்பட்டு தேர்பவனி நடக்கிறது.
கும்பகோணம் பிஷப் புனிதம் செய்து தேர்பவனியை தொடங்கி வைக்கிறார். தேர்பவனி தொடங்கியதும் சிறப்பு வாணவேடிக்கை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பேராலய நிர்வாகம் செய்துள்ளது.
- திருவிழா நாளை தொடங்கி 15-ந்தேதி வரை நடக்கிறது.
- 14-ந் தேதி பூண்டி அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெற உள்ளது.
திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே இயற்கை எழில் சூழ்ந்த அமைப்பில் அமைந்துள்ளது பூண்டி மாதா பேராலயம். பழம் பெருமை வாய்ந்த பூண்டி மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா வருகிற 6-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்கி 15-ந் தேதி (திங்கட்கிழமை) வரை நடக்கிறது.
பேராலய ஆண்டு திருவிழா தொடக்க நிகழ்வாக கொடியேற்ற நிகழ்ச்சி 6-ந் தேதி நடக்கிறது. அப்போது பூண்டி அன்னையின் உருவத்துடன் கூடிய கொடியை பக்தர்கள் ஜெபமாலை பாடல்களுடன் ஊர்வலமாக எடுத்து வருவார்கள். ஊர்வலம் கொடி மேடையை வந்து அடைந்தவுடன் கொடி மரத்தில் அந்தமான் நிகோபார், போர்ட் பிளேர் மறை மாவட்ட பிஷப் விசுவாசம் செல்வராஜ் கொடியை ஏற்றி வைத்து மரியா ஆறுதலின் அன்னை என்ற தலைப்பில் திருப்பலி நிறைவேற்றுகிறார்.
திருப்பலியில் பேராலய அதிபர், சாம்சன் துணைஅதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மிக தந்தை அருளானந்தம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். கொடியேற்றத்தினை தொடர்ந்து நவநாட்கள் எனப்படும் திருவிழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பரபவனி நடக்கிறது.
அதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் அருள் தந்தையர்களால் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மே மாதம் 8-ந் தேசி புதுமை இரவு வழிபாடு கும்பகோணம் மறை மாவட்ட அருட்தந்தை யூஜின் டோனி வழிநடத்துதலில் நடைபெற உள்ளது.
பூண்டி மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா நாளான மே மாதம் 14-ந் தேதி பூண்டி மாதா பேராலயத்தில் பணியாற்றி மறைந்த அருட் தந்தையர்கள் லூர்து சேவியர் மற்றும் ராயப்பர் அடிகளாரின் நினைவு திருப்பலி நிறைவேற்றப்படும்.
மாலை கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார் மரியா அருளின் ஊற்று என்ற தலைப்பில் திருப்பலி நிறைவேற்றுகிறார். அதனைத் தொடர்ந்து இரவு 9.30 மணி அளவில் மல்லிகை மலர்களாலும் மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் பூண்டி அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெற உள்ளது.
தொடர்ந்து சிறப்பு வாணவேடிக்கை நடைபெறும். மே மாதம் 15-ந் தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலியை கும்பகோணம் ஆயர் அந்தோணிசாமி நிறைவேற்றுவார். மாலையில் கொடி இறக்கத்துடன் பூண்டி திருத்தல பேராலயத்தின் ஆண்டு திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன் தலைமையில் அருட்தந்தையர்கள், பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
- பூண்டி அன்னையின் சிறிய தேர் பவனி நடைபெற்றது.
- திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. தஞ்சையில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த பேராலயம் பிரசித்திப்பெற்ற கிறிஸ்தவ பேராலயங்களுள் ஒன்றாகும்.
இந்த பேராலயம் கொள்ளிடம் ஆற்றிற்கும், காவிரி ஆற்றிற்கும் நடுவில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது சிறப்பாகும். பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறவும், உலக நன்மைக்காகவும் ஒவ்வொரு மாதமும் 8-ந் தேதி பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
பூண்டி மாதா பேராலயத்தில் இந்த ஆண்டுக்கான முதல் புதுமை இரவு வழிபாடு நேற்று நடந்தது. இந்த வழிபாட்டின் முதல் நிகழ்வாக பெரம்பலூர் மறை மாவட்ட முதன்மை குரு ராஜமாணிக்கம் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு தொடர்ந்து வர பூண்டி அன்னையின் சிறிய தேர் பவனி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தை அருளானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறிய தேர் பவனிக்கு பின்னர் நடைபெற்ற புதுமை இரவு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டு, உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்து கொண்டனர்.
இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
- நாளை கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது.
- பெருவிழா ஆகஸ்டு 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் மாதா பிறப்பு பெருவிழா கடந்த மாதம்(ஆகஸ்டு) 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பர பவனியும், திருப்பலியும் நடைபெற்று வருகிறது. விழாவின் 9-ம் நாளான நேற்று (புதன்கிழமை) மாலை மறைவட்ட முதன்மை குரு இன்னசென்ட், `மரியாள் தியாகத்தின் சிகரம்' என்ற பொருளில் திருப்பலி நிறைவேற்றினார்.
விழாவின் 10-ம் நாள் மற்றும் மாதாவின் பிறப்பு நாளான இன்று (வியாழக்கிழமை) மாலை கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார், `மரியாள் எளிமையின் எடுத்துக்காட்டு' என்ற பொருளில் திருப்பலி நிறைவேற்றுகிறார்.
திருப்பலி முடிந்ததும் இரவு 9.30 மணிக்கு மாதாவின் பிறப்பு பெருவிழா தேர்பவனி நடக்கிறது. மின்விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு தேர்பவனி நடக்கிறது.
தேர்பவனி மற்றும் திருப்பலியில் தமிழகம் மட்டுமின்றி கேரளா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலியை கும்பகோணம் பிஷப் அந்தோணிசாமி அடிகளார் நிறைவேற்றுவதுடன் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட், உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மிக தந்தையர்கள் அருளானந்தம், ஜோசப் மற்றும் பங்குமக்கள் செய்து வருகின்றனர்.
- 8-ந்தேதி பூண்டி மாதாவின் அலங்கார தேர்பவனி நடக்கிறது.
- 9-ந்தேதி கொடி இறக்கப்பட்டு மாதாவின் பிறப்பு பெருவிழா நிறைவு பெறுகிறது.
தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி -கல்லணை சாலையில் அமைந்துள்ளது, பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதா பேராலயம். இந்த பேராலயத்தில் மாதா பிறப்பு பெருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முன்னதாக பூண்டி மாதாவின் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை பக்தர்கள் ஏந்தி வர பூண்டி மாதா பேராலயத்தின் முன்புறமுள்ள கொடி மரத்தில் கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார் கொடியை புனிதம் செய்து ஏற்றி வைக்கிறார்.
கொடியேற்றத்தை தொடர்ந்து மரியாள்-புதுமைகளின் அன்னை என்ற மையக்கருத்தை வைத்து பிஷப் அந்தோணிசாமி அடிகளார் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் மாலையில் சிறிய தேர்பவனியும், சிறப்பு திருப்பலியும் பல்வேறு அருட்தந்தையர்களால் நிறைவேற்றப்படுகிறது.
பூண்டி புதுமை மாதாவின் பிறப்பு நாளாக கருதப்படும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி மாலை சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. அதனைத்தொடர்ந்து இரவு 9.30 மணி அளவில் மலர்களாலும், மின் விளக்கு அலங்காரத்திலும் பூண்டி மாதாவின் அலங்கார தேர்பவனி நடக்கிறது.
அதற்கு அடுத்த நாள் 9-ந் தேதி காலை மரியாள்-தாய்மையின் தலைப்பேறு என்ற பொருளில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. அதன் பின்னர் கொடி இறக்கப்பட்டு மாதாவின் பிறப்பு பெருவிழா நிறைவு பெறுகிறது.
பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட், உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மிக தந்தையர் அருளானந்தம், ஜோசப் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
- 9-ந்தேதி மரியாள்- தாய்மையின் தலைப்பேறு என்ற தலைப்பில் திருப்பலி.
- 9-ந்தேதி பூண்டி புதுமை மாதாவின் பிறப்பு பெருவிழா நிறைவு பெறும்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள புகழ்மிக்க கிறிஸ்தவ பேராலயம் பூண்டி மாதா பேராலயம். திருக்காட்டுப்பள்ளியில் இருந்து கல்லணை செல்லும் வழியில் காவிரி கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது பூண்டி மாதா பேராலயம். தன்னை நாடி வந்து வேண்டுபவர்களுக்கு, வேண்டியவை எல்லாம் தரும் வல்லமை படைத்த பூண்டி மாதாவை பூலோகம் போற்றும் பூண்டி மாதா என்று அனைவரும் போற்றி அழைப்பர்.
இந்த பேராலயத்தில் பூண்டி புதுமை மாதாவின் பிறப்பு பெருவிழா வருகிற 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று மாலை சிறு சப்பரத்தில் பூண்டி மாதாவின் சிறிய சொரூபம் வைக்கப்பட்டு, பூண்டி மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடியை பக்தர்கள் சுமந்து வருவார்கள். புனித கொடியை கும்பகோணம் பிஷப் அந்தோணிசாமி புனிதம் செய்து ஏற்றி வைப்பார். தொடர்ந்து மரியாள்- புதுமைகளின் அன்னை என்ற தலைப்பில் கும்பகோணம் பிஷப் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.
இதில் பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட், உதவி பங்குத்தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ் ஆன்மிக தந்தையர் அருளானந்தம், ஜோசப் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். திருவிழா நாட்களில் தினமும் மாலை கொடி ஊர்வலம், சிறப்பு திருப்பலி ஆகியவற்றை பல்வேறு அருட்தந்தையர்கள் நிறைவேற்றுவர். பூண்டி புதுமை மாதாவின் பிறப்பு நாளாக கருதப்படும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந்தேதி மாலை மரியாள் -எளிமையின் எடுத்துக்காட்டு என்ற தலைப்பில் பிஷப் அந்தோணிசாமி திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. அதன் பின்னர் இரவு 9.30 மணி அளவில் பூண்டி அன்னையின் தேர் பவனியை பிஷப் தொடங்கி வைப்பார். 9-ந்தேதி மரியாள்- தாய்மையின் தலைப்பேறு என்ற தலைப்பில் திருப்பலி நிறைவேற்றுவார். அன்று மாலை கொடி இறக்கப்பட்டு பூண்டி புதுமை மாதாவின் பிறப்பு பெருவிழா நிறைவு பெறும். இதற்கான ஏற்பாடுகளை பேராலய விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா நாளான நேற்று காலை பூண்டி மாதா பேராலய பங்குதந்தையர்களாக இருந்து மறைந்த அருட்தந்தையர்கள் லூர்துசேவியர் மற்றும் ராயப்பர் ஆகியோர் நினைவு திருப்பலி நிறை வேற்றப்பட்டது. மாலையில் வழக்கம் போல் ஜெபமாலை பாடல்களுடன் கொடி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் திருவிழா திருப்பலி கும்ப கோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோனிசாமி தலைமையில் நடைபெற்றது.
“மரியா சமூக அக்கறை கொண்ட புரட்சிப்பெண்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த திருப்பலியில் கும்பகோணம் பிஷப்புடன் மறைமாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி, மறைவட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்கு தந்தையர்கள் ஜெயன், ஜேம்ஸ் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பலி்க்கு பின்னர் பூண்டி மாதாபேராலய முகப்பில் மல்லிகை மலர்களாலும், வண்ண மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் பூண்டி மாதாவின் சொரூபம் வைக்கப்பட்டது. தொடர்ந்து கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோனிசாமி பூண்டி மாதாவின் ஆண்டு திருவிழா தேர்பவனியை புனிதம் செய்து தொடங்கி வைத்தார்.
தேர்பவனி நடைபெற்ற போது திரண்டிருந்தவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டனர். தங்கள் கைகளில் இருந்த காசுகளையும், மலர்களை சமர்ப்பித்தும் வழிபட்டனர். தேர்பவனியின் போது வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
தேர்பவனி நிறைவடைந்ததும் இன்று (புதன்கிழமை) காலை மரியா-சிதறுண்ட இதயங்களை ஒருங்கிணைப்பவர் என்ற தலைப்பில் காலை 6 மணிக்கு கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி திருப்பலி நிறைவேற்றுகிறார். இதனை தொடர்ந்து மாலையில் கொடியிறக்கப்பட்டு பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
தேர்பவனியையொட்டி திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியண்ணன் தலைமையில், திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மோப்பநாய் கொண்டு பேராலயத்தின் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடைபெற்றது.
புதுமை இரவு வழிபாட்டை நீர்முளை புனித பிரான்சிஸ் சேவியர் ஆலய பங்கு தந்தை ஞானதுரை தலைமை தாங்கி நடத்தினார். இதில் சிறப்பு திருப்பலி நடந்தது. பின்னர் தேர்பவனி நடைபெற்றது. அப்போது கிறிஸ்தவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி மாதாவை பிரார்த்தனை செய்தனர்.
நிகழ்ச்சியில் பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்கு தந்தையர்கள் ஜெயன், ஜேம்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதில் நாள்தோறும் சிறப்பு திருப்பலிகள், ஏசுவின் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. தவக்காலத்தின் நிறைவாக நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஏசு உயிர்த்தெழும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஏசு உயிர்த்தெழுந்தார் என்பதை அறிவிக்கும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி, ஒளி வழிபாடு நடந்தது.
அதைத்தொடர்ந்து ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடந்தது. பேராலயத்தின் எதிரில் அமைந்துள்ள கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்கு தந்தையர்கள் ஜெயன், ஜேம்ஸ் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பலியில் கலந்து கொண்டவர்கள் மெழுகு வர்த்தியை ஏந்தி பிரார்த்தனை செய்தனர். நேற்று காலையிலும் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தன. இதேபோல் பூதலூர், கோட்டரப்பட்டி, மைக்கேல்பட்டி, மணத்திடல், மேகளத்தூர், முத்தாண்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஈஸ்டர் தின திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதில் இருந்து பூண்டிமாதா பேராலயத்தில் தவக்கால சிறப்பு திருப்பலிகள் தினமும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தவக்காலத்தில் முதல் வெள்ளியன்று ஏசுநாதரின் பாடுகளை விளக்கும் சிலுவைப்பாதை நடைபெற்றது. நேற்று மாலை பூண்டி மாதாபேராலயத்தில் ஏசுநாதர் சுமந்த சிலுவையி்ன் ஒரு பகுதி உள்ள சிலுவை மைக்கேல்பட்டி புனித மைக்கேல் ஆலய வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து மைக்கேல்பட்டியில் இருந்து சிலுவையுடன் தவக்கால நடைபயணம் தொடங்கியது. கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி சிலுவையை புனிதம்செய்து நடைபயணத்தை தொடங்கி வைத்தார். மறைவட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மைக்கேல்பட்டியில் தொடங்கிய தவக்கால நடைபயணம் ஒன்பத்துவேலி, திருக்காட்டுப்பள்ளி, புதுச்சத்திரம் வழியாக பூண்டி மாதா பேராலயத்தை அடைந்தது. நடைபயணத்தின் போது எடுத்து வரப்பட்ட சிலுவையுடன் சிறப்புதிருப்பலி பேராலயத்தில் குடந்தை பிஷப் அந்தோணிசாமி தலைமையில் நிறைவேற்றப்பட்டது. நடைபயணம் மற்றும் திருப்பலியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்..
முன்னதாக பேராலய நுழைவு வாயிலில் இருந்து பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையில் அருட்தந்தையர்கள் வழக்கமான முறைப்படி பேராலயத்தில் குழுமியிருந்து பக்தர்களின் இடையே வந்தனர். பின்னர் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் ஜெயன், ஜேம்ஸ் மற்றும் அருட்தந்தையர்கள் திருப்பலி நிறைவேற்றினர். தொடர்ந்து புத்தாண்டில் அனைவரும் வளமாக நலமுடன் வாழ பேராலய அதிபர் பாக்கியசாமி வாழ்த்தினார்.
நேற்று காலை, மதியம், மாலையிலும் புத்தாண்டையொட்டி சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. புத்தாண்டையொட்டி பூண்டி மாதா பேராலய வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. புத்தாண்டு வழிபாடு ஏற்பாடுகளை பேராலய அதிபர்பாக்கியசாமி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். இதைப்போல முத்தாண்டிப்பட்டி, மைக்கேல்பட்டி, மணத்திடல், சுக்காம்பார், கோட்டரப்பட்டி, மேகளத்தூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள தேவாலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்